ஏழை மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005ஆம் ஆண்டு கல்விக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கி வருகிறது. வங்கியில் கடன் பெறுபவர்கள் படிப்பை முடித்து
குறைந்தபட்சம் ஓராண்டு கழித்து அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது படித்துவிட்டு பல மாணவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அவர்களிடம் சில வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மூலம் அதிரடியாக பணத்தை வசூல் செய்து வருகிறது. இதனால், சிலர் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள 15 வங்கி குறை தீர்ப்பு மையங்களில் கல்விக் கடன் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு, சென்னை வங்கி குறை தீர்ப்பு மையத்தில் 8,285 புகார்கள் பாதிவாகியிருந்தன. இந்த ஆண்டு அது 4% உயர்ந்து 8,645 புகார்களாக உள்ளன. கடன் மற்றும் முன்பணம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,382 புகார்களில் 78% புகார்கள் கல்வி கடன் சம்பந்தப்பட்டவை. அதில் 67% புகார்கள் தேசிய மயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியை பற்றியது. மேலும் 10 பெரிய வங்கிகளுக்கு எதிராக பெரும்பாலான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜுன் 30ஆம் தேதி வரை, 1.33% புகார்கள் நிலுவையில் உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு அது 1.02% இருந்தது.
மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து 8,539 புகார்களும், புதுச்சேரியில் இருந்து 89 புகார்களும், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து 17% புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 74% புகார்கள் வங்கி குறை தீர்ப்பு சட்டத்தின் கீழ் எளிதில் சரி செய்ய முடியும். மேலும், 38% மேற்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட வங்கியிடம் குறைகளைத் தெரிவிக்காமல் நேரடியாக வங்கி குறை தீர்ப்பு மையத்தை அணுகி அளிக்கப்பட்டவை. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தீர்வு காணுமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், மதுரையைச் சேர்ந்த லெனின் (23) என்னும் பொறியியல் மாணவர் தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியே காரணம். ஏனெனில், அந்த வங்கி தனியார் நிதி நிறுவனத்திடம் கடனை வசூல் செய்யுமாறு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிதி நிறுவனம் கடனை வசூலிக்க ஆட்களை நியமித்து கடன் பெற்ற லெனின் குடும்பத்தைத் தேடிச் சென்று மிரட்டியுள்ளது. இதுபோன்ற பல நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால், கடன் பெற்றவர்களில் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது ஊரை விட்டு ஓடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.