கொலம்பிய அதிபர் மேனுவல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
அமைதி உடன்படிக்கை:
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அரசுப் படைகளுக்கும் - இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 52 ஆண்டுகளாக, உள்நாட்டு சண்டை நடந்தது. இதில், 2.60 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; 60 லட்சத்துக்கும் அதிகமானோர், உள்நாட்டு அகதிகளாக உள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வர, கிளர்ச்சியாளர்களுடன், கொலம்பிய அதிபர், அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.
நோபல் பரிசு:
அவருடைய இந்த முயற்சியை பாராட்டி, உயரிய சர்வதேச விருதான, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கப்பதக்கமும், பட்டயமும், ஆறு கோடி ரூபாய் பரிசுத்தொகையும், மேனுவல் சாண்டோசுக்கு கிடைக்க உள்ளது. இந்நிலையில், பரிசுத்தொகை முழுவதையும், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, அதிபர் மேனுவல் அறிவித்து உள்ளார்.
நன்கொடையாக :
'பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்டளைகளுக்கும், மறுசீரமைப்பு திட்டங்களுக்கும் செலவிடுவதற்காக, எனக்கு கிடைத்த பரிசுத்தொகையை நன்கொடையாக வழங்குகிறேன்' என்று அவர் கூறியுள்ளார்