தேர்வே எழுதாமல் முதலிடம் பிடித்த மாணவி !!

 பீஹார் மாநில கல்வித்துறையின் அவலம்!!

பீஹாரில், பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரூபி ராய், தேர்வே எழுதவில்லை என, தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாநில முதல் மாணவி :


பீஹாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மே மாதம் நடந்த, பிளஸ் 2 தேர்வில், ரூபி ராய் என்ற மாணவி, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாதாரண விஷயங்களை கூட, ரூபி ராய், தப்பும் தவறுமாக கூறியதை பார்த்த நிருபர்கள், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

பேட்டியில் சொதப்பல் :

'பொலிட்டிகல் சயின்ஸ்' பாடத்தை, 'பிராக்டிகல் சயின்ஸ்' என, அவர் கூறியது, அனைவரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிருபர்களுடன் ரூபி ராய், சொதப்பலாக பேசிய வீடியோ, இணையத்தில், 'வைரல்' ஆக பரவியது. இதனால், பீஹார் மாநில கல்வி முறை, பலத்த கேலிக்குள்ளானது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரூபி ராயிடம் விசாரணை நடத்தினர். அவரின் கையெழுத்தையும், விடைத்தாள்களையும் ஒப்பிட்டு, தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில், 'ஹோம் சயின்ஸ்' பாடத்தை தவிர, வேறு எந்த தேர்வையும் அவர் எழுதவே இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

தடவியல் ஆய்வு :

இதுகுறித்து, பாட்னா எஸ்.பி., மனு மஹராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வின் ஆறு பாடங்களில், ஹோம் சயின்ஸ் பாடத் தேர்வை மட்டுமே ரூபி ராய் எழுதியுள்ளார். மீதமுள்ள ஹிந்தி, ஆங்கிலம், புவியியல், பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் இசை ஆகிய தேர்வுகளை, வேறு சிலர் எழுதி உள்ளனர். தடவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல விடைத்தாள்களில், பீஹார் மாநில கல்வி வாரியத்தின் குறியீடு காணப்படவில்லை. அந்த தாள்கள், இடைச்செருகலாக சேர்க்கப்பட்டுள்ளன. ரூபி ராயை போன்று, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோரின் விடைத்தாள்களும், தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன; அவற்றின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக்கு சிக்கல் :

பீஹாரின் வைஷாலி நகரில் உள்ள விஷ்ணு ராய் பள்ளியில் படித்த, ரூபி ராய் உள்ளிட்ட நான்கு பேர், மாநில அளவில், முதல் நான்கு இடங்களை பிடித்தனர். இவர்கள் அனைவரும், மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம், நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விஷ்ணு ராய் பள்ளிக்கு எதிராக, மாநில கல்வித்துறை புகார் செய்தது.

கைது :

போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மாணவி ரூபி ராய், கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீஹார் மாநில கல்வி வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவர் மனைவியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான உஷா சின்ஹா, விஷ்ணு ராய் பள்ளி முதல்வர் பச்சா ராய் ஆகியோரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...