நீதிமன்றங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த தமிழக அரசு தாயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசிராமலிங்கம் என்பவர், தமிழகத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிமன்ற அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதிகள் சஞ்சய்கவுல் கிஷன், ஆர்.மாகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றங்களில் கேமரா பொருத்த ஆகும் செலவு குறித்து திருத்திய மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜாரன அரசு தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைகளில் ஆகியவற்றில் கேமராக்கள் பொருத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த அறிக்கையை அளிக்க போதிய கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து, இந்த வழக்கை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு தொடரப்பட்டதன் அவசியம்:
வழக்கறிஞர்கள் சட்டவிதிகளில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களின்படி, நீதிபதிக்கு எதிராக கைநீட்டி, உரத்த குரலில் வாதிடும் வழக்குரைஞர்களை இடைநீக்கம் செய்வதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினாலே பாதி பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பதற்காக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எதிர்த்துதான் வழக்கறிஞர்கள் இரண்டு மாத காலம் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கறிஞர்கள் போராட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். https://minnambalam.com/k/1470268850