பள்ளி கழிவறைக் கதவை விற்ற மாணவர்கள்!

அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர், பள்ளி கழிவறைக் கதவை காயிலான் கடையில் விற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி கழிவறைக் கதவைக் கழற்றி, அதை இரும்புக் கடையில் விற்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அரசு
மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை, பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர் மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் உட்பட 4 பேரும் கழிவறையில் இருந்த இரும்புக் கதவை கழற்றி, பள்ளியின் பின்புறமாகக் கொண்டு சென்று, இரும்புக் கடையில் எடைக்குப் போட்டுள்ளனர். இதுபற்றி விசாரித்த கடைக்காரரிடம் ஆசிரியர் அனுப்பியதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, கடை உரிமையாளர் கதவை எடை போட்டு பணத்தைக் கொடுத்துள்ளார். பின்னர், 4 மாணவர்களும் அந்தப் பணத்தை பிரித்தெடுத்துக் கொண்டனர். இதுகுறித்து, வேறுசில மாணவர்கள் தலைமையாசிரியர் சீதா மகேஸ்வரியிடம் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர் மாணவர்களை விசாரணை செய்தார். அப்போது, கதவை திருடிச் சென்றது 9ஆம் வகுப்பு மாணவர்கள் எனத் தெரிய வந்ததுள்ளது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் கழுகுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பின்னர், இரும்புக் கடை உரிமையாளரை எச்சரித்து, கதவை மீட்டு பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, மதுரை வாடிப்பட்டியின் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மது குடிக்க பணம் இல்லாததால், வகுப்பறையில் இருந்த மேசையை விற்று மது வாங்கிக் குடித்தனர். இந்தச் சம்பவம் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் நீதிபோதனை வகுப்புகள் இல்லாததும் இதுபோன்ற சம்பவங்கள் மாணவரிடையே நடக்கக் காரணம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...