புதிய பென்சன் திட்டத்தின் இலட்சணம் இதுதான் !!

புதிய பென்சன் திட்டத்தின்படி பென்சன் வாங்கும்போதுதான் வலியும் வேதனையும் தெரியும். இதற்குத்தானே சங்கங்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இப்போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள்? போராட்டத்தை நடத்தும் அமைப்புகள் போராட்ட வேலைகளையும் கவனித்து அவர்களது பள்ளி பணியையும் கவனித்து போராட்டத்திற்கு வலு சேர்க்க ஆசிரியர்களை அழைப்பதற்கு
பள்ளிகளுக்கு வரும்போது எத்தனை பேர் அவர்களை வாங்க என கேட்கின்றீர்? அவர்களை பார்த்ததுமே வகுப்புக்கு நேரமாகிடும், பசியெடுக்கும் சாப்பிடனும்,  பாத்ரூம்போகனும், HM கூப்பிடுவார், ஆனால் அழைக்க வந்த அமைப்புகளைசேர்ந்தவர்காளுக்கு மேற்கண்ட எதுவும் கிடையாதே? கொஞ்சம் யோசிச்சு பாருங்க? போராட்டம் வலிமையாக இருந்தால் மட்டுமே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். போராட்ட உணர்வுகள் சமீப காலங்களில் மங்கிப்போய் கிடக்கிறது. குறிப்பாக 2003 ஏப்ரலுக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் போராட்டத்தில் கலந்துகொள்கின்றீர்? பென்சன் இல்லை என்ற கோரிக்கைக்கு மேல் மற்றொரு கோரிக்கை உண்டா?  போராட்டங்களில் வெறும் நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்வதால் பயனில்லை. அனைவரும் கலந்துகொண்டால்தான் போராட்டத்தின் வேகம் அதிகரிக்கும் நம் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்குச்செல்லும். நம் கண் முன்னே உள்ள கோரிக்கைகள். புதிய பென்சன், ஊதிய முரண்பாடு, புதிய ஊதியக்குழு, D.A இன்னும் நிறைய்ய.... போராடினால் மட்டுமே! எனவே வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துகொள்ளுங்கள் சங்கம் உங்களை பாதுகாக்கும்.





.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...