ஸ்மார்ட் சிட்டி' அதிகாரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு - சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு !

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை ஸ்மார்ட் சிட்டி (Chennai Smart City Limited) பிரிவில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: தலைமை நிர்வாக அதிகாரி (Chief Executive Officer - 01)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: தலைமை நிதி அதிகாரி (Chief Finance Officer - 01)
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: நிறுவனத்தில் செயலாளர் (Company Secretary - 01)
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பட்டம், அறிவியல், கலைத்துறை, நிர்வாகம், எம்பிஏ, சிஏ முடித்தவர்கள்.





விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman, Chennai Smart city Limited, Amma Maaligai, Ripon Build ing Complex, Greater Chennai Corporation, Chennai - 600 003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...