நாளை முதல் அமலுக்கு வருகிறது பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் !!

நாடாளுமன்றத்தில் 2016 ஆகஸ்ட் மாதம் பினாமி பரிவர்த்தனை தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், 2016 நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தப் புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு
கடுமையான தண்டனை வழங்கப்படும்.

பினாமி பெயரில் சொத்து வாங்கினால் 3 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை, 7 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை போக சொத்தின் சந்தை மதிப்பில் 25% -ஐ அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.

பினாமி சொத்துகளை இழப்பீடு எதுவும் அளிக்காமல் பறிமுதல் செய்யவும் மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துகளுக்கு, பினாமி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.





பினாமி சொத்துகளை விசாரனை செய்யும் நீதிமன்றங்களும், அதிகாரிகளும் விவரிக்கப்படுள்ளது.

கறுப்பு பண நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வர இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...