ஷூவில் பதுங்கியிருந்த பாம்பு : சக மாணவர்கள் ஓட்டம் மாணவன் கவலைக்கிடம்!!

மாணவனை, அவனது ஷூவில் பதுங்கியிருந்த பாம்பு, கடித்தது. இதை பார்த்த சக மாணவர்கள் அலறியடித்து ஓடினர். சேலத்திலுள்ள பிரபல தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும், சத்யாஸ், 13, என்ற மாணவன், நேற்று காலை, பள்ளிக்கு சென்றான். அங்கு, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தியபோது, சத்யாஸ் சகஜமாக
இல்லாமல், நெளிந்தபடி இருந்தான். அதை பார்த்த ஆசிரியர், மாணவனிடம் விசாரித்தார். அதற்கு மாணவன், 'தன் ஷூவில், ஏதோ கடிப்பது போல் உள்ளது' என்றான். பதற்றமடைந்த ஆசிரியர், ஷூவை கழற்றச் சொன்னார். அவன் கழற்றியபோது, 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு வெளியேறியது.

மேலும், பாம்பு கடித்து, அவனது காலில் ரத்தம் வழிந்தது. பாம்பை பார்த்து, சக மாணவர்கள் அலறியடித்து ஓடினர். பின், பள்ளி ஊழியர்கள், அந்த பாம்பை அடித்துக் கொன்றனர். மாணவன் சத்தியாஸை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...