அபாயக் கட்டத்தை தாண்டினார் முதல்வர்: ட்விட்டரில் மாலினி பார்த்தசாரதி!

தமிழக முதல்வர் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையைத் தவிர, நம்பும்படியாக எந்த உறுதியான தகவலும் வெளிவருவதில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார் என்று மூத்தப் பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபட குறிப்பிட்டுள்ளார். சென்னை

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று கூட அப்பல்லோ மருத்துவமனை, ‘சிகிச்சைக்கு முதல்வர் சிறப்பாக ஒத்துழைக்கிறார்’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தது. முதல்வருக்காக மருத்துவமனை வாசலிலே அதிமுக தொண்டர்கள் தவம் கிடக்கிறார்கள். இந்நிலையில், மூத்தப் பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு மகிழ்ச்சியான செய்தி… முதல்வர் ஜெயலலிதா அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார். குணமடைந்து வருகிறார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஒருவர் அவரை மருத்துவமனையில் பார்த்துவிட்டு சொன்ன தகவல் இது’ என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‘ஜெயலலிதா நலமாக இருக்கிறார்’ என்றும், ‘தமிழகத்துக்கு அவரது சேவை தேவை. நான் அவரது நீண்ட கால நெருங்கிய தோழி. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...