டெல்லி சுகாதார அமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் – உச்சநீதிமன்றம்!

டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் பெயர்களை தாக்கல் செய்யாததால் கடந்த திங்கள்கிழமை, டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.



கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின், பாஜக தலைமையிலான மாநகராட்சிகளில் சுகாதார நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். பாஜக நகரப் பகுதிகளை குப்பைகளைப் போட்டு சுகாதாரமற்றதாக மாற்றி வருகின்றனர். மேலும், இது பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தின் நோக்கத்தை அழித்து வருகிறது. இப்படி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் கொசுக்கள் மூலம் நோய் பரவும் வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்னை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் நீதிமன்றம் சுகாதாரத்துறை அமைச்சரை அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் குறித்த ஆவணத்தை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் நேற்றோடு முடியும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் இதுவரை அந்த அதிகாரிகளின் பெயர்களை சமர்ப்பிக்கவில்லை.

அவர்களின் பெயர்களை தாக்கல் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கேட்டார் என டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.

இங்கு மக்கள் டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் செத்து கொண்டிருக்கும் வேளையில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அந்த அதிகாரிகளின் பெயர்களை சமர்ப்பிப்பதற்கு 24 மணி நேரம் அதிகம் என்பதால் அவகாசம் தர முடியாது. அவருடைய கடமையை சரியாக செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியது. எனவே அவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

மேலும் நீதிமன்றம், ‘ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் டெல்லியில் இருக்கின்ற நோய்களின் அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. 70 எம்.எல்.ஏக்களில் 67 எம்.எல்.ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருக்கின்றனர். இவர்கள் நோய்கள் வராமல் தடுப்பது அவர்களின் கடமை என்பதை உணராமலே இருக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,070 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மாநகாரட்சிகளில் 3,695 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அந்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இருப்பது வேதனையளிக்கிறது’ என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31 வரையில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கையானது 12,255 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 8,941 ஆக உள்ளது. இதனைத் தொடர்ந்து மராட்டியத்தில் 839 பேரும், ஆந்திராவில் 492 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த 1,360 ரத்த மாதிரிகள் சிக்குன்குனியா பாதிப்பு உள்ளதை காட்டுகிறது என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலை நீர்மூலம் பரவும் தேசிய நோய்க் கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...