மத்திய, மாநில அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஏப்., மாதத்திற்கு பின்னே, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
ஆனால், தனியார் பள்ளிகள், டிச., மாத இறுதியில் விண்ணப்பங்களை வழங்க துவங்குகின்றன. நுாறுக்கும் குறைவான இடங்களுக்கு, ஜனவரி வரையிலும்,
ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்பனை செய்கின்றன. பின், பிப்ரவரிக்குள், மாணவர் சேர்க்கையை முடிப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மிக முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை துவங்கியுள்ளன. இதில் முதல் பள்ளியாக, சென்னை குரோம்பேட்டையில் செயல்படும், எஸ்.எஸ்.எம்., சுந்தரவல்லி நினைவு பள்ளியில், ப்ரீ கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள், இணையதளத்தில் வெளியிடப்படும் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, பல பள்ளிகள் ஆன்லைனில் மட்டுமே, விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளன.