முதல் அமைச்சர் உடல்நலம் குறித்து அறிய இன்று மாலை தமிழக ஆளுநர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை செல்கிறார்?

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி (வியா ழக்கிழமை) இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற் பட்டதால் சென்னை ஆயி ரம்விளக்கில் உள்ள அப் பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் 16 நாட்கள் ஆகிறது. இதுவரை அவரை மருத்துவர்கள் தவிர யாரும் சந்திக்க வில்லை.



கவர்னர் உட்பட பல தலைவர்கள் மருத்துவமனை வந்தும், மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்களே தவிர, ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

இந் நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி பரபரப்பாக்கினார்.  இந் நிலையில் இன்று மருத்துவமனை வந்த ராகுல் காந்தி வந்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், அமைச்சர்களையும், மருத்துவர்களையும் மட்டும் சந்தித்து, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந் நிலையில், தமிழக தலைமைச் செயலாள்ர் ராமமோகன் ராவை கவர்னரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்,. இன்னும் சிறிது நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனை வரும் கவர்னர், முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...