தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இன்றுமுதல் இம்மாத இறுதிவரையில் ஐ.ஆர்.சி.டிசி. தளத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வெறும் ஒரு பைசாவில் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம்மூலம் ஒருவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அவருக்கு 92 காசு பிரீமியத்தில் பயண இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும். இதன்மூலம், ரயில் பயணத்தின்போது விபத்து அல்லது அசம்பாவித சம்பவங்களில் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். இந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்தில் ஒரு கோடிப் பேர் பதிவு செய்துள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரயில் இன்சூரன்ஸ் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டுவரும்நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த இன்சூரன்ஸில் சிறப்புச் சலுகை வழங்க இந்திய ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.
இந்த சிறப்புச் சலுகைமூலம், 10 லட்சத்துக்கான இன்சூரன்ஸை ஒரு பைசாவுக்குப் பெறமுடியும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை இன்று (அக்டோபர் 7)முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.