சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர்கள், பெற்றோர், மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 84 வருடங்களுக்குப் பிறகு, நிதிநிலை சரியில்லாமல் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் தள்ளாடியபோது, 2013இல் அரசு அதனை கையகப்படுத்தியது. அதன் பிறகும் கல்வி கட்டணத்தை
நிர்வாகம் குறைக்கவில்லை. அதனால், கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நேற்று பல்கலை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர், மருத்துவர்கள் டாக்டர் இரவீந்தரநாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், ‘அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 14 ஆண்டுகளில் தமிழக அரசிடமிருந்து சுமார் ரூ.2300 கோடிக்கு மேல் மானியமாக பெற்றுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் மானியம் பெறப்பட்டுள்ளது. இந்தப் பணம் மக்கள் வரிப்பணம்தான். ஆனால், இன்னும் தனியார் கல்லூரி கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.5,54,000 வசூல் செய்யப்படுகிறது. ஆனால், அரசு கல்லூரியில் வெறும் ரூ.13,600 தான்’ என்றார். ‘இதுகுறித்தான போராட்டம் தொடரும்… தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்’ என டாக்டர் இரவீந்தரநாத் கூறினார்.