அரசு கேபிள் "டிவி' நிறுவனம் மற்றும் "எல்காட்' சார்பில் இயங்கும் பொது
"இ-சேவை' மையங்களில், ஆதார் பதிவு செய்யும் சேவை ஓரிரு நாட்களில் துவங்க உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' நிறுவனம் சார்பில், ஒன்பது தாலுகா அலுவலகங்களில், பொது "இ-சேவை' மையங்கள்
செயல்படுகின்றன. "எல்காட்' மூலமாக, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில், பொது "இ-சேவை' மையங்கள் செயல்படுகின்றன. புது வாழ்வு மையங்கள் சார்பில், குண்டடம், பல்லடம் ஒன்றியங்களில், 42 இடங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், 185 இடங்களிலும், பொது "இ-சேவை'மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பங்கள், மின் கட்டணம் செலுத்துவது, "மொபைல்' ரீ-சார்ஜ்' போன்ற சேவைகளும், "பாஸ்போர்ட்' கோரி விண்ணப்பம் பதிவு செய்வது, போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வது போன்றவையும் அளிக்கப்பட்டு வருகின்றன.சிறப்பு அனுமதி பெற்று, ஆதார் பதிவு செய்தவர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் "டிவி' நிறுவனம் நடத்தும் சேவை மையங்களில், "பிளாஸ்டிக் கார்டு' பெறும் சேவை அளிக்கப்படுகிறது.மாவட்டத்தின், 16 இடங்களில் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஆதார் பதிவு செய்யும் பணியையும், தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, அரசு கேபிள் நிறுவனத்தின் சேவை மையங்களிலும், "எல்காட்' சேவை மையங்களிலும், ஆதார் அட்டை பதிவு செய்யும் சேவையும், விரைவில் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில், ஆதார் பதிவு மையம் இயங்கினாலும், பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் சம்பளம் பெற்று வருகின்றனர். தனியார் நிறுவன "டெண்டர்' முடிந்ததால், அரசே ஆதார் பதிவு பணியை ஏற்றுள்ளது. முதல் கட்டமாக, தாலுகா அலுவலகங்களில் உள்ள சேவை மையங்கள், "எல்காட்' சேவை மையங்களில், ஆதார் பதிவு செய்யும் சேவை துவங்கப்பட உள்ளது. அதற்கான உபகரணங்கள் அனைத்தும் பிரத்யேகமாக பெறப்பட்டுள்ளன.
"சாப்ட்வேர்' இணைப்பு கிடைக்கப் பெற்றதும், ஆதார் பதிவு செய்யும் பணியும் துவங்கும். தினமும், "டோக்கன்' பெற்றுக் கொண்டு, வரிசைப்பதிவு ஆதார் பதிவு செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு, ஐந்து வயது பூர்த்தியானதும், அருகில் உள்ள மையங்களில் ஆதார் பதிவு செய்து கொள்ளலாம். புதிய சேவைகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும், என்றனர்.