அரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம் !!

அனைத்து அரசு அலுவலகங்களிலும், 31ம் தேதி முதல், நவ., 5 வரை, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றுபட்டு, நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, அரசுக்கு பெருமை சேர்ப்பதுடன், மக்களுக்கு சேவைகள் புரிவோம். எவ்வித அச்சமும், தயவுமின்றி, மனசாட்சி காட்டும் நெறியின்படி, கடமையை ஆற்றுவோம் என, அரசு ஊழியர்கள், உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் வருவோரிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விளம்பரப் பலகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...