இணையதளத்தில் புதிய மின் இணைப்பு கட்டண மையத்தில் 'கவுன்டர்' வருமா?

'இணையதளத்தில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க, மின் கட்டண மையங்களில், சிறப்பு கவுன்டர் ஏற்படுத்த வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிய மின் இணைப்பு பெற, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்குள்ள அதிகாரிகள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
நிர்ணயித்துள்ள, குறித்த காலத்தில் இணைப்பு வழங்குவதில்லை. இதனால், பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இதையடுத்து, மின் வாரிய இணையதளத்தில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்டில் துவக்கி வைத்தார். ஆனால், திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே, மின் கட்டண மையங்களில், இணையதளம் வழியே, மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க, சிறப்பு கவுன்டர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அறிவு பலருக்கு இல்லாததால், அவர்களால், இணையதளத்தில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க தெரியவில்லை. இதனால், மின் கட்டண மையங்களில், இணையதள திட்டத்துக்கு விண்ணப்பிக்க, தனி கவுன்டர்களை ஏற்படுத்த வேண்டும்; இந்த சேவைக்கு, குறைந்த கட்டணமும் வசூலிக்கலாம்.

விண்ணப்பிப்பதில் சந்தேகம் ஏற்பட்டால், மின் ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அனைத்து விபரமும் கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், அலைக்கழிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...