காஸ் மானியம்: ஆதார் எண் சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் சமர்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி மானியத் திட்டம்

வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு காஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. முன்னர், இந்த மானியம் காஸ் ஏஜென்சிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
அதன்பின்னர், காஸ் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஆதார் கட்டாயம்

இந்த மானியம் பெற வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண் சமர்பித்தவர்களுக்கு மட்டுமே காஸ் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



நவம்பர் 30 வரை நீட்டிப்பு

முன்னதாக, ஆதார் எண் சமர்பிக்க செப்டம்பர் 30 வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டித்து நவம்பர் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...