கடந்த 18ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, உரி தாக்குதலுக்கு பதிலடிக் கொடுப்பதற்காக இந்திய ராணுவம் கடந்த 28ஆம் தேதி, வான்வெளித் தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. அதைத் தொடர்ந்து, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவியுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப், சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, ‘நாங்கள் அணு ஆயுதங்களை காட்சிக்காக வைக்கவில்லை. இந்தியா அத்துமீறி நடந்தால், அந்நாட்டுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம். அந்நாட்டை அழிப்போம்’ என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் உயர் மட்ட தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சால், அமெரிக்கா எரிச்சலடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் திரும்ப திரும்ப தெரிவித்து வருகிறோம். இதுபோன்ற பொறுப்பற்ற வகையில் பேசுவதை பாகிஸ்தான் உயர் மட்ட தலைவர்கள் தவிர்க்க வேண்டும்’ என்றனர்.