இந்தியாவிலேயே டேராடூனில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிதான் சுத்தமான சுற்றுச்சுழலை கொண்டுள்ள பள்ளி என்று, பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கியுள்ளார்.
டேராடூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி சுத்தமான வளாகத்தைப் பெற்றுள்ளது என்று வெள்ளிக்கிழமை (நேற்று)
அறிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி முதல்வர் சாரு ஷர்மாவுக்கு விருதை வழங்கினார். அரசுத் துறைகளின்கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளைக் காட்டிலும் தனிப்பட்ட அங்கீகாரத்தை கேந்திரிய வித்யாலயா பள்ளி பெற்றுள்ளது. இந்த விருது பெறுவதற்கான தகுதியை இந்தப் பள்ளி வளர்த்துக்கொண்டதோடு, மாணவர்களிடம் அதற்கான விழிப்புணர்வை உருவாக்கி வந்துள்ளது என்று, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் கமிஷனர் சந்தோஷ் மால் கூறினார்.
பள்ளி முதல்வர் சாரு ஷர்மா இதுகுறித்து கூறியதாவது: இந்தப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும். ’ஸ்வச் பாரத்’ திட்ட பிரச்சாரம் இந்தியாவில் முழுவீச்சில் நடந்துவருகிறது. டேராடூன் கேந்திரியா வித்யாலயா பள்ளிக்கு சுத்தமான பள்ளி வளாகம் என்ற மரியாதை வழங்கப்பட்டது உண்மையில், பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம். எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக தூய்மைப்படுத்தும் வேலையில் ஈடுபடும்போது எந்தவொரு விருதையும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
இதையடுத்து பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் சந்தோஷத்துடன் பள்ளி மட்டுமல்லாமல், சுற்றிலுள்ள பகுதியையும் சுத்தமாக வைப்பதற்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறியுள்ளனர்.