ஓட்டுக்கு "துட்டு' கொடுத்தால் நடவடிக்கை!!!

தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று திறப்பு... "ஹலோ! பணம் தர்றாங்க!'

திருப்பூர் : தேர்தல் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக, கட்டணமில்லா தொலைபேசி இணைப்புகளுடன், கட்டுப்பாட்டு அறை, இன்று திறக்கப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு என, மொத்தம், 3,173 பதவி


களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் நகராட்சி, அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர், குண்டடம் ஒன்றியங்களில் உள்ள, 141 ஊராட்சிகள்; அவிநாசி, திருமுருகன்பூண்டி, ஊத்துக்குளி, குன்னத்தூர், சாமளாபுரம், ருத்ராவதி பேரூராட்சிகள் என, 1,577 பதவிகளுக்கு, 17ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

மீதியுள்ள நான்கு நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் உள்ள, 1,596 பதவிகளுக்கு, 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைய இருப்பதால், இன்று முதல் பிரசாரம் சூடுபிடிக்க துவங்கும். வேட்பாளர்கள், வீடு வீடாக பிரசாரம் செய்வதுடன், ஓட்டுக்கு பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள்

கொடுப்பது போன்ற குற்ற செயல்களும்

நடைபெற வாய்ப்பு உள்ளது.

மேயர் உட்பட, தலைவர் பதவி

களுக்கு மறைமுக தேர்தல் நடக்க இருப்பதால், ஒவ்வொரு கவுன்சிலர் பதவியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. போட்டியும் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு வேட்பாளரும், பணத்தை வாரி இறைக்கவும் தயங்க மாட்டார்கள். எனவே, மாவட்ட முழுவதும், தேர்தல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களை கண்டறிய, பறக்கும் படை எதுவும் அமைக்கப்படாவிட்டாலும், நடவடிக்கை எடுக்க வேண்டியது, தேர்தல் நடத்தும் அலுவலரின் கடமையாகிறது. மாவட்டத்தில், 300க்கும் அதிகமான தேர்தல் அலுவலர்கள் பணியில் இருப்பதால், அந்தந்த அலுவலரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். எனவே, தேர்தல் புகார்களை தெரிவிக்க ஏதுவாக, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில், மூன்றாவது தளத்தில், உள்ளாட்சி

தேர்தல் பிரிவில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள்

வசதிக்காக, இரண்டு கட்டணமில்லாத தொலைபேசி இணைப்புகளுடன், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், போதிய பணியாளர்களுடன், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறுகையில், "வேட்புமனு தாக்கல் முடிந்து, பிரசாரம் வேகமெடுக்கும் என்பதால், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார் அதிகம் வரப்பெறும். பொதுமக்கள் வசதிக்காக, கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. அதில், இரண்டு கட்டணமில்லாத தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான, எண் இன்று மாலை, வெளியிடப்படும்,' என்றனர்.

செலவு கணக்கு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலில், அதிகப்படியான வேட்பாளர் போட்டியிடுவதால், அதிகாரிகள் செலவு விவரங்களை கண்காணிக்க முடியாது. ஒவ்வொரு வேட்பாளரும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நோட்டு வாயிலாக, தேர்தல் செலவு விவரங்களை சமர்ப்பித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்புதல் பெறவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு முன், செலவு விவரங்களை, ஐந்து முறை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து, ஒரு மாதத்துக்குள், ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...