தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தும் போதெல்லாம், பெயர் சேர்க்கக் கோரி, லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிவது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான, வாக்காளர் பட்டியலில், 5.82 கோடி பேர் இடம் பெற்றிருந்த னர். திருத்தப் பணிக்காக, செப்., 1ல், வரைவு வாக்காளர் பட்டியல்
வெளியிடப்பட்டது; அதில், சட்டசபை தேர்தலில் இருந்ததை விட, 60 ஆயிரத்து, 733 வாக்காளர்கள் குறைவு.
14.10 லட்சம் பேர் மனு
இதன் பின், திருத்தும் பணி, செப்., 1ல் துவங்கி, 30ம் தேதி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற என, 21 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில், புதிதாக பெயர் சேர்க்க மட்டும், 14.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சமீபத்தில், சட்டசபை தேர்தல் முடிந்திருப்பதால், பெயர் சேர்க்க, குறைவான விண்ணப்பங்களே வரும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், வழக்கம் போல, லட்சக்கணக்கான விண்ணப்பங் கள் குவிந்தது, அவர்களை அதிர்ச்சிஅடையச் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், போட்டி போட்டு, பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுப்பது தான், இதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.
இதை தடுப்பதற்கான வழிகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், சிறப்பு முகாம் நடத்தும் போதெல்லாம், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர், பெயர் சேர்க்க விண் ணப்பம் அளிக்கின்றனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தான், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
எனவே, இம்முறை வாக்காளர் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்த்தோம்; மீண்டும் அதே அளவு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
சுப்ரீம் கோர்ட் அனுமதி
இதை தவிர்க்க, ஆதார் எண் அடிப்படையில், வாக் காளர் பட்டியலை சரி பார்த்தால் மட்டுமே, அதிக அளவில் விண்ணப்பங்கள் வருவதை தடுக்க முடியும். இதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற வேண்டி உள்ளது; அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தவறு!
'வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் இருந்தால், எந்த இடத்தில் உள்ள பெயரை நீக்க வேண்டும் என, சம்பந்தப் பட்டவரிடம் கேட்கப்படும்; அதன்பிறகே, பெயர் நீக்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிகாரிகள் அவ்வாறு கேட்காமல், இஷ்டப்படி பெயர்களை நீக்கி உள்ளனர்.
உரிய விசாரணையின்றி பெயர்களை நீக்குவது; முறையாக பரிசீலிக்காமல் அனுமதிப்பது போன்ற காரணங்களே, விண்ணப்பங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.