ஈகோ பிரச்னையாக்க வேண்டாம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை !!

நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தை ஈகோ பிரச்னையாக மாற்ற வேண்டாம் எனவும் கூறியுள்ளது.


நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்
இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தாக்கூர் கூறுகையில், நீதிபதிகள் நியமனத்தை ஈகோ பிரச்னையாக மாற்ற வேண்டாம். சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையை உங்களால் நிறுத்தி வைக்க முடியாது. நாங்கள் பொறுமையாக வேலை பார்க்கிறோம். கோர்ட் நடவடிக்கைகள் அழிவதையும், கோர்ட் அறைகள் பூட்டப்பட்டு கிடக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் நீதிபதிகள் நியமனம் குறித்து பல பரிந்துரைகள் அனுப்பியுள்ளது.
கோர்ட் பரிந்துரையை வைத்துக்கொண்டு நீங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாட்டில் உள்ள பல கோர்ட் அறைகள், நீதிபதிகள் இல்லாததால் பூட்டி கிடக்கின்றன. மத்திய அரசுக்கு கோர்ட் அனுப்பிய பட்டியல் நிலை என்ன? 9 மாதங்களாகியும் கொலிஜியம் குழு அளித்த பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நிர்வாகத்தின் செயலற்ற தன்மையால் நீதித்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப நேரிடும் எனக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...