கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்
பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் வெளியிட்டது. அதை தொடர்ந்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பட்டதாரிகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். ஆனால், இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் டெட் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த செவ்வாய்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழக அரசு நேற்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. மேலும் டெட் தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தவுடன் 10 தினங்களுக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.