பள்ளியில் ஒரு லட்சம் மதிப்பிலான கணினிகள் திருட்டு!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்றில் காலாண்டு விடுமுறையின்போது ஒரு லட்சம் மதிக்கத்தக்க கணினிகள் மர்ம நபர்களால் திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சங்கரன்கோவிலில் உள்ள ஏ.வி.ஆர்.எம்.வி. காலனியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று

இயங்கி வருகிறது. காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,நேற்று விடுமுறை முடிந்து வழக்கம்போல் அலுவலர்கள் பள்ளியை திறந்தபோது, கணினி அறையின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த ஒரு புரஜெக்டர், மூன்று மானிடர்கள், மூன்று கீ போர்டுகள், இரண்டு சி.பி.யுக்கள் திருட்டு போனது தெரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜி போலீஸில் புகார் செய்தார். திருட்டு போன கணினிகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏ.வி.ஆர்.எம்.வி. காலனி பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளர் வீடு உள்பட ஐந்து வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...