கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாங்கும்போது கவனமாக பரிசோதித்து வாங்குங்கள் என்று இந்திய மக்கள் அனைவரையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் அறிக்கையில், ‘அதிகளவிலான கள்ள நோட்டுகள் மக்களிடையே
புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் நமக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மக்களில் பலர் பொதுவாகவே தாங்கள் வாங்கும் பணம் உண்மைதானா அல்லது கள்ள நோட்டுகளா என்று ஆராய்ந்து பார்த்து வாங்குவதில்லை. இதைப் பயன்படுத்தியே கள்ள நோட்டுகள் மக்களிடையே அதிகரிக்கின்றன. ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகிய மிகப் பெரிய தொகையில்தான் கள்ள நோட்டுகள் அதிகம் இருக்கின்றன.
எனவே, இவற்றை கையில் வாங்கும்போது உன்னிப்பாக ஆராய்ந்து வாங்குங்கள். கள்ள நோட்டுகள் எவ்வாறு இருக்கும் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது போன்ற தகவல்கள் எங்களது இணையதளத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. அதில் சென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே மக்கள் கள்ள நோட்டுகளை அடையாளம் காணுவதை ஒரு பழக்கமாகவே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலமாக கள்ள நோட்டுகளை நம்மால் ஒழிக்க இயலும்’. இவ்வாறு ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.