சாலையோரம் ரூபாய் நோட்டுகள் - ரயில் கொள்ளை பணமா??

சாலையோரத்தில் ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததையடுத்து அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் என்னும் கிராமத்தின் சாலை ஓரத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் நேற்று இரவு கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளது. இவை அனைத்தும்

ரூபாய் 100, ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளாகவும், ஒவ்வொரு ரூபாய் கட்டும் துண்டு துண்டாக வெட்டப்பட்டும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதை அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், காவல்துறை அதிகாரிகள் கங்காதரன், ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், வெட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த ரூபாய் நோட்டுகளை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பயன்படுத்த முடியாதளவுக்கு ரூபாய் நோட்டுகளை வெட்டி மரத்தடியில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்குச் சென்ற சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான கிழிந்த ருபாய் நோட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டது. ரயிலின் மேற்கூரையை துளையிட்டு வங்கி பணம் ரூ.5.75 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை நடந்து இரு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும், காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்பு துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் சேலம் முதல் விருத்தாசலம் வரை உள்ள பகுதிகளில் நடந்திருக்கலாம் என்று கருதி, கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் யாரும் இருக்கிறார்களா என்று கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பண்ருட்டி அருகே ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்த கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட பணம் சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளையடித்த பணமா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இவை அனைத்தும் கள்ள நோட்டுக்களாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது. அந்தக் கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த பணத்தின் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் பெங்களூருக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்களும் பணம் கிடந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த கோ.குச்சிப்பாளையம் கிராமத்தை காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...