மும்பையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் வெப்சைட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தி, தீவிரவாத
முகாம்களை அழித்தனர். இந்நிலையில் சட்டக்கல்லூரியின் வெப்சைட் முடக்கப்பட்டுள்ளதால், இது தீவிரவாதிகளின் எதிர்வினையா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
மும்பை சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் நேற்று மாலை ஆறு மணியளவில் கல்லூரியின் வெப்சைட் முடக்கப்பட்டதைக் தெரிந்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெப்சைட்டை முடக்கியவர்கள், அதன் முகப்பு பக்கத்தில் பாகிஸ்தான் சைபர் கொள்ளைக்காரர்கள் என்று பொருளடங்கிய ‘பாக் சைபர் பைரேட்ஸ்’ என்ற பெயரில், ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்காக எல்லா இந்தியர்களுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்று கடந்த 3ஆம் தேதி டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வெப்சைட் முடக்கப்பட்டது. இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் வெப்சைட் முடக்கிய அடுத்த நாளே, கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் வெப்சைட் முடக்கப்பட்டு அதே மாதிரியான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.