பிரதம மந்திரியின் புதிய காப்பீட்டுத் திட்டம்!

பிரதம மந்திரியின் புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநில அரசுகளுக்கு அதிகமான தொகை செலவாகும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



வறுமைகோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு தற்போது ’ராஷ்ட்ரீய ஸ்வஸ்தியா பீமா யோஜனா’ என்ற திட்டத்தின்கீழ் ரூ.30,000 வரையில் காப்பீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதை மாற்றி அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் காப்பீடு வழங்கும் பிரதம மந்திரியின் தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சகத்துக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் தேவைப்படும். இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு 60 சதவிகித தொகையையும் மாநில அரசுகள் மீதித் தொகையையும் வழங்க வேண்டும்.

ஆனால் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வஸ்தியா பீமா யோஜனா திட்டத்தில், மாநில அரசுகள் 25 சதவிகித தொகை மட்டுமே வழங்குகின்றன. எனவே, புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும்போது மாநில அரசுகளுக்கு அதிகமாக செலவாகும். அதிலும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் 10 சதவிகித தொகையை மட்டுமே தற்போது வழங்குகின்றன. எனவே, இம்மாநிலங்களுக்கு ஆகும் செலவு இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...