பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கி யிருந்த, 1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்காரர்களின், 7,016 கோடி ரூபாய் கடனை, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' தள்ளு படி செய்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாட்டின் பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப்
இந்தியா, தங்களிடம் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாத, 100 பெரும் பணக்காரர் களின் பட்டியலை தயாரித்துள்ளது. அதில், பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் உண்டு.
வாராக்கடன்
எஸ்.பி.ஐ., உட்பட, 17 வங்கிகளிடம் வாங்கிய, 6,000 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து, 9,000 கோடி ரூபாயை, மல்லையா பாக்கி வைத்துள்ளான். அந்தக் கடனை மீட்க, உச்ச நீதிமன்றத்தை வங்கிகள் அணுகிய நிலை யில்,பிரிட்டனின் லண்டன் நகருக்கு, மல்லையா தப்பிச் சென்றான்.இந்நிலையில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கிய, 1,200 கோடி ரூபாய் கடனை, எஸ்.பி.ஐ., தள்ளு படி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடனை திரும்பச் செலுத்த வசதி இருந் தும், அதை கட்டாமல் காலம் கடத்தி வரும், 62 பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடன்களையும் சேர்த்து, 7,016 கோடி ரூபாய் வாராக்கடன்களை யும், எஸ்.பி.ஐ., தள்ளுபடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதில், கே.எஸ்.ஆயில் நிறுவனம் வாங்கிய, 596 கோடி ரூபாய்; சூர்யாபார்மாசூட்டிகல்ஸ் நிறு வனத்தின், 526 கோடி ரூபாய்; ஜி.இ.டி., பவர் நிறுவனத்தின், 400 கோடி ரூபாய்; சாய் இன்போ சிஸ்டம் பெற்றிருந்த, 376 கோடி ரூபாய் கடன் களும் அடக்கம். வாராக்கடன் அளவை குறைப்பதற்காக,
இந்த முடிவை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எடுத் துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டு மின்றி, மேலும், 31 பெரும் பணக்காரர்களின் கடன் களில், பாதியை அவ்வங்கி தள்ளுபடி செய்துள்ளது; ஆறு பேரின் கடன்களை, வாராக் கடன் பட்டியலில் சேர்த்துள்ளது.
எதிர்க்கட்சிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த செயல், 'செல்லாத நோட்டு களை மாற்றவும், புதிய ரூபாய் நோட்டுக்காகவும், மக்கள் அலையும் நிலையில், வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாத தொழிலதிபர்களை காப்பாற்றும் நடவடிக்கை' என, எதிர்க்கட்சிகள்
விமர்சித்துள்ளன. '
வங்கிகளில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத, பெரும் பணக்காரர்களின் பட்டியலை, மத்திய அரசுஉடனடியாக வெளி யிட வேண்டும்' என்றும், அக்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தவறான புரிதல் ஜெட்லி விளக்கம்
பண முதலைகளின் கோடிக்கணக்கான ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, எதிர்க் கட்சிகள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
'கிங் பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட பலரின், கோடிக்கணக்கான ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, சிலர் தவறாக புரிந்துள்ளனர். நிதி துறையில் கையாளப்படும் ஆங்கில வார்த்தைகளை அப்படியே அர்த்தம் செய்து கொள்வதால், இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எஸ்.பி.ஐ., வங்கியின் கணக்குப் புத்தகத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவே, கடன் என்ற பகுதியில் இடம் பெற்றுள்ள தொகை, வாராக் கடன் என்ற பகுதியில் பதிவு செய்யப்பட்டுள் ளது. வாராக்கடனில் இடம் பெற்றுள்ளதால், அந்த கடன் தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தமாகிவிடாது.
காங்., தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான், விஜய் மல் லையாவுக்கு கடன் வழங்கியது என்பதை யும், நினைவில் கொள்ள வேண்டும்.
எனினும், நிலு வையில் உள்ள அனைத்து தொகையையும் வசூலிப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். -