காட்பாடி வட்டத்துக்குள்பட்ட வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆலங்கனேரி, கீழூர், கொத்தமங்கலம், கீழ்விலாச்சூர், வேலம்பட்டு, முத்தரிசிகுப்பம், ஸ்ரீபாதநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஆலங்கனேரியும், கீழூர், வேலம்பட்டு மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும், முத்தரசிகுப்பம், கொத்தமங்கலம் பிற்படுத்தப்பட்டோருக்கும், கீழ்விலாச்சூர், ஸ்ரீபாதநல்லூர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கிராமங்களில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் உரிய கல்விச் சான்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி பதிவுத் தபாலில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.