நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் - செப்டம்பர்) இந்தியாவின் நிதி பற்றாக்குறை ரு.4.47 லட்சம் கோடியாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முழு ஆண்டுக்கான பட்ஜெட் கணக்கீட்டில் 83.9 சதவிகிதம் ஆகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் பட்ஜெட் கணக்கீட்டில் நிதி பற்றாக்குறை முதல் ஆறு மாதங்களில் 68.1 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி பற்றாக்குறை என்பது நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வருவாய்க்கும், ஆகும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும். இந்த நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை 5.33 கோடியாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவிகிதமாகும்.
இந்தியாவின் ’பொது கணக்கு கட்டுப்பாட்டாளர்’ வெளியிட்ட தகவலில், பட்ஜெட்டில் கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் ரூ.10,54,101 கோடியில், வரி வருவாய் ரூ.4.48 லட்சம் கோடியாகவும், கடனல்லாத மூலதனம் மூலமாகக் கிடைக்கும் வருவாய் ரூ.5.79 கோடியாகவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், நாட்டின் மதிப்பிடப்பட்ட செலவீனம் முதல் ஆறு மாதங்களில் ரூ.3,22,633 கோடியாக உள்ளது. இது ஒட்டுமொத்த பட்ஜெட் செலவீனத்தில் 58.7 சதவிகிதமாகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் மதிப்பிடப்பட்ட செலவீனம் 54.6 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த செலவீனம் ரூ.19.78 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முதல் ஆறு மாதங்களிலேயே நாட்டின் செலவீனம் ரூ.10.27 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்த தொகையில் 92.1 சதவிகிதம் (ரூ.3.25 லட்சம் கோடி) முதல் ஆறு மாதங்களிலேயே ஏற்பட்டுள்ளது.