தஞ்சை, அரவக்குறிச்சியில் பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. மூன்று தொகுதிகளிலுமே தேர்தல் கண்காணிப்புக் குழுவும், பறக்கும் படையும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் ரூ.7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ‘பறிமுதல் செய்யப்பட்ட பணம் புதிய
ரூபாய் 2000 நோட்டுகள்’ என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி கூறி உள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் 500, 1000 நோட்டுகள் நேற்று முன்தினம் (08-11-2016) நள்ளிரவோடு செல்லாது என்ற நிலையில், இன்றுதான் அதாவது 10-11-2016 அன்றுதான் புதிய ரூபாய் 2000 நோட்டுகள் வங்கிகள் மூலம் பரிவர்த்தனைக்கு வர இருக்கும் நிலையில், வெளிவருவதற்கு முன்பே தஞ்சையில் நேற்று கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூபாய் 2000 நோட்டுகள் இருந்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முறையாக ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் ஆர்.டி.ஓ-விடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டதில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம்முக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று தெரியவந்தது. இதுதொடர்பாக பேசிய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, “தஞ்சையில் ரூ.7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குச் சொந்தமானது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் புதிய ரூபாய் 2000 நோட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார். ‘தொழில்நுட்ப கோளாறு’ என்று குறிப்பிட்ட அவர் ‘ஆவணங்கள் இருப்பதால் விசாரணைக்கு பின்னர் ஒப்படைக்கப்படும்’ என்றார்.