நாசா விண்வெளி வீரர்களின் தேர்வுமுறை!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகம் குறித்தும், அங்கு மனிதர்களை அனுப்புவது குறித்தும் பல கோணங்களில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Space X என்ற விண்கலம் தயாரிப்பு நிறுவனம்தான் நாசா விஞ்ஞானிகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் பல உதவிகளை வழங்கி

வருகிறது. சமீபத்தில்கூட செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அனுப்புவது பற்றி வைத்திருக்கும் பல திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அனுப்பும் விண்வெளி வீராங்கனையாக Space X நிறுவனத்தில் வேலை புரியும் மோரன் என்ற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளது.

நாசா விஞ்ஞானம் கறுப்பு, வெள்ளை பாகுபாடு இல்லாமல் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும், 1978ஆம் ஆண்டு முதல்தான் பெண் ஆராய்ச்சியாளர்களை விண்கலத்தில் அனுப்பும் முறையை தொடங்கியது. அதன்பின் பல பெண்கள் ஆராய்ச்சியில் கலந்துகொண்டு சாதித்துள்ளனர்.

அதன்படி மோரன் Space X நிறுவனத்தில் விண்கலத்துக்கும், ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இணைப்பை ஏற்படுத்தும் கம்யூனிக்கேஷன் சிக்னல் தரும் அப்ளிக்கேஷனை உருவாக்கும் வேலையில் உள்ளவர். இதில் இருப்பவர் விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறில் ஒரு விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்க காரணம், இவர் விண்கலம் மட்டுமின்றி தன்னார்வமாக வானியல் குறித்து படிப்பது, ஆராய்வது என 10 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் அண்டார்ட்டிகா மற்றும் அதனை போன்ற பல பனி பிரதேசத்துக்கு சென்று 10 மாதங்கள் ஆராய்ந்துள்ளார். வானியல், சுற்றுச்சூழல் போன்றவற்றில் தினமும் அப்டேட் செய்வது, ஆராய்ச்சி மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபடுவதால், அவரை நாசா விஞ்ஞான அமைப்பு நேர்முகத் தேர்வுக்கு (Interview) அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற்ற நேர்முக தேர்வில் நேரடியாக வந்து மோரனால் கலந்துகொள்ள முடியவில்லை. அச்சமயம் அண்டார்டிக்காவில் இருந்தவர் மோசமான வானிலை காரணமாக கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், தேர்வு வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடைபெற்றுள்ளது. அதில் மோரன் வெற்றி பெற்று அடுத்தாண்டு ஜுன் மாதம் நடக்கவிருக்கும் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் பங்குகொள்ள இருக்கிறார். நாசா ஆராய்ச்சி மையம் விண்கலம் குறித்து படித்தவர்களை மட்டுமே விண்வெளிக்கு அனுப்புவதில்லை. அதைக் குறித்து தன்னார்வமிக்க சில மனிதர்களையும் தேர்ந்தெடுக்கிறது. ஆனால், விண்வெளியில் திடீரென ஏற்படும் எந்த பிரச்னையையும் சமாளிக்கும் திறன் அவர்களுக்கு இருக்க வேண்டும். இவை மட்டும் இருந்தால் நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் கலந்துகொள்ளலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல கடுமையான உழைப்பும், ஆர்வமும் தேவை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...