டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் !!

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று

அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


நிலைமை சீரடைந்து விட்டதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலை நெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...