புயல் எச்சரிக்கை... நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு ரத்து !!

புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த பொறியியல் கல்லூரி தேர்வு ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக
அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த பொறியில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...