தமிழகத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் மூன்று தொகுதி சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் (நவ. 17) ஓய்கிறது.
இதனிடையே, வாக்களிப்பதற்கான 11 வகையான ஆவணங்கள் அடங்கிய பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக அந்தத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமையன்று பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பிரசாரம் ஓய்கிறது: மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால், அந்தத் தொகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
குறிப்பாக, திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், வியாழக்கிழமை (நவ. 17) மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
வாக்களிக்க ஆவணங்கள்: வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை எவை என்பது குறித்து தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். இது குறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், வங்கி-அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியட்டை, தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேர்தல் துறையால் அளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு, நாடாளுமன்ற-சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
ஒரு வாக்காளர் வேறொரு சட்டப் பேரவைத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் அளிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தால், அந்த அடையாள அட்டையையும் ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
ஆனால், அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்த முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்தத் தகுதியுடையவர் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.