அதிவேக "சூப்பர் கம்ப்யூட்டர்கள்': மீண்டும் சீனாவுக்கு முதலிடம்!!

உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக சீனாவின் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சன்வே தாய்ஹுலைட் என்ற அந்தக் கணினி, சீனாவின் தேசிய இணைவரிசைக் கணினிப் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தக் கணினியால் நொடிக்கு 9300 கோடி கோடி கணக்கீடுகளை செய்ய முடியும் என்பதால் உலகின் அதிவேக 500 கணினிகளின் பட்டியலில் இது முதலிடம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையிலும் சன்வே தாய்ஹுலைட் முதலிடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணினிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனாவின் தியான்ஹே-2 கணினியைவிட சன்வே தாய்ஹுலைட் கணினி 3 மடங்கு வேகமும், செயல்திறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கணினியின் தரவுச் செயலிகள் (புராஸஸர்கள்) அனைத்தும் முழுக்க முழுக்க சீனாவில் வடிவமைக்கப்பட்டு, அந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.
ஆண்டுக்கு இரு முறை வெளியிடப்படும் உலகின் முதல் 500 அதிவேகக் கணினிகள் பட்டியல், உலகம் முழுவதிலும் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள் எனப்படும் அதிவேகக் கணினிகளின் திறனை மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...