370வது பிரிவை திருத்தலாமா? விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!!!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவில் திருத்தம் செய்வது குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் முன்வந்துள்ளது.

திருத்தம் செய்ய முடியாது :


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு அரசு பணியில் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், 'மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது' என்று கூறப்பட்டிருந்தது.

விசாரிக்க முடிவு :

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 'அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவில் திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து விசாரிக்கப்படும்; இந்த வழக்கில், மத்திய அரசும், வாதியாக சேர்க்கப்படும்' என, அமர்வு கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...