ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாஜிஸ்திரேட்டு அதிரடி கைது !!

மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு கூற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாஜிஸ்திரேட்டு அதிரடி கைது.


பால்கர், பால்கரில், மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு கூற ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாஜிஸ்திரேட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.ரூ.50 லட்சம் லஞ்சம்


பால்கர் நீதிமன்றத்தில் சப்– டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வருபவர் சிவாஜி தாவ்பாத்(வயது46). இவர் வழக்கு விசாரணை ஒன்றில் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு கூற ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டார். இது குறித்து மனுதாரர் தானே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.இதையடுத்து மனுதாரர் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் படி மாஜிஸ்திரேட்டை சந்தித்து ரூ.50 லட்சத்தை கொடுத்தார். இதில், ரூ.3 லட்சம் அரசு செல்லாது என அறிவித்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். மீதி அனைத்தும் கள்ளநோட்டுகள்.3 பேர் கைது

இந்தநிலையில் மாஜிஸ்திரேட்டு லஞ்ச பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் ஜெயேஜ்(25), அந்த பகுதி துணை தாசில்தார் சதீஷ் மானிவாடே(57) ஆகியோரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புதுறையினர் லஞ்சம் வாங்கி பிடிபட்ட மாஜிஸ்திரேட்டு சிவாஜி தாவ்பாத், துணை தாசில்தார் சதீஷ் மானிவாடே ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்த உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...