47ஆயிரம் ஏடிஎம்-கள் ரெடி!!

புதிதாக வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுக்கும்வகையில் நாடு முழுவதும் 47ஆயிரம் ஏடிஎம்-கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த 8ஆம் தேதி மோடி அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள்
புழக்கத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவித்தது

மத்திய அரசு அறிவித்து பத்து நாட்களுக்குமேல் ஆகியும் இதுவரை பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்கவில்லை. இயங்கும் சில ஏடிஎம்-களிலும் விரைவில் பணம் தீர்ந்துவிடுவதால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ் முந்த்ரா தலைமையில் நாடு முழுவதுமுள்ள ஏடிஎம்-கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 12,500 ஏடிஎம் இயந்திரங்களை மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது

அரசு அறிவித்த முதல் நாள் 1௦,௦௦௦ ஏடிஎம்-கள் சீரமைக்கப்பட்டன. அதையடுத்து, நாளொன்றுக்கு 125௦௦ ஏடிஎம்-கள் சீரமைக்கப்பட்டு வருகிறது என பணியை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி 47 ஆயிரம் ஏடிஎம்-கள் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2.2 லட்சம் ஏடிஎம்-கள் உள்ளன. இதில் இம்மாத இறுதிக்குள் 3௦ முக்கிய நகரங்களில் உள்ள ஏடிஎம்-கள் சீரமைக்கும்பொருட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏடிஎம்-கள் சீரமைக்கப்பட்டாலும் அதில் பணம் எடுப்பதற்கு சிரமமாகத்தான் உள்ளது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...