உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கு எதிராக 25 வருடங்களில் இல்லாதளவுக்கு இந்தாண்டில் 120 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ் தக்கூர், உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பத்தில் தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் காட்டி வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்த தமிழக அரசு, நீதிபதிகள் நியமனம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் 25 வருடங்களில் இல்லாதளவுக்கு இந்த வருடத்தில் 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, தனது பக்கத்தின் உண்மையை நிலைநாட்டியது. ஒவ்வொரு ஆண்டும் நீதித்துறை பரிந்துரையின்படி, 80 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு 121 நீதிபதிகள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவே, உயர்ந்த எண்ணிக்கையில் நீதிபதி நியமனமாகும். இந்தாண்டு 120 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, ஒரு எண்ணிக்கை குறைகிறது. மேலும் கொலீஜியம் குழுவின் பரிந்துரையை மதித்து நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக நடந்துள்ளது. புள்ளி விவரங்கள் உண்மையை எடுத்துச்சொல்லும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.