பணத் தட்டுப்பட்டை குறைக்கும்வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடியான அறிவிப்பால் அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்
செல்லாதவையாகிவிட்டன. மக்கள் அவற்றை வங்கிகளில் கொடுத்துவிட்டு மாற்றாக ரூ.100 நோட்டுகளையும் புதிய ரூ.2000 நோட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்றைய தினம் வங்கிகள் இயங்கவில்லை. மேலும் நேற்று மற்றும் இன்று என இரண்டு தினங்களிலும் ஏ.டி.எம். மையங்களும் இயங்கவில்லை. நாளை முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் ரூ.50 நோட்டுகளும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய்ய 50 ரூபாய் நோட்டுகள் இன்றியமையாதவை. மேலும் 100 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்-களில் கிடைக்கும் என்றாலும் அவை எந்தளவுக்கு இருப்பிருக்கும் என்பது தெரியவில்லை. எனவே, 50 ரூபாய் நோட்டுகள் இனி ஏ.டி.எம். மையங்களில் கிடைக்கும் என்பதால் புதிய நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு வரும்வரை மக்களின் அன்றாட சில்லறை பயன்பாடுகளை நிவர்த்திசெய்ய இயலும். அதிவிரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவத்தில் வரவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.