உத்திரப்பிரதேசம் : மூட்டை மூட்டையாகப் பணம் எரிப்பு!

கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர நேற்று முன்தினம் இரவு பிரதமர் நரேந்திரமோடி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதற்கு மக்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன. நடுத்தர மக்களின் கவலை எல்லாம் அவகாசம் கொடுத்திருக்கலாம் என்பதாக மட்டுமே இருக்கிறது. ஆனால், பணத்தை

பதுக்கியவர்கள் திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில்தான் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திரப்பிரதேசம் பரேலியில் மூட்டை மூட்டையாகப் பணம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரேலி, சி.பி.கஞ்ச் பகுதியில் உள்ள பர்ஷா கேடா சாலையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மூட்டை மூட்டையாக ரூபாய் 500, 1000 நோட்டுகளை வெட்டி, அதனை தீ வைத்து எரித்து மூட்டையில் கட்டிப் புதைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து எரிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றியுள்ளனர். அதன் பின்னர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். ‘எரிந்த ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சரி பார்க்க பரிசோதிக்கின்றோம்’ என்று பரேலி தலைமை போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, திருச்சி சுபானியாபுரத்தில் உள்ள குப்பை தொட்டியில் ரூபாய் 500, 1000 நோட்டுகளை கொண்ட மூட்டை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...