கூட்டுறவு வங்கிகளில் 500, 1000 நோட்டுகளுக்கு 'நோ' நகைகளை மீட்க முடியாமல் விவசாயிகள் திண்டாட்டம்!!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால், நகைகளை மீட்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.



மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. 9ம் தேதி முதல் பழைய நோட்டுகளை அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியது. இதனால், அனைத்து வங்கிகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டு புதிய ரூபாய் வழங்கும் பணி நடந்து வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வங்கிகள் மற்ற தேசிய வங்கிகளைப் போலவே பண பரிமாற்றம் செய்து வருகின்றன.

குறிப்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு அதிகளவு நகைக்கடன்களை கொடுத்து வருகின்றன. தற்போது வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிப்பு கணக்கில் செலுத்தலாம். மேலும், அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன்கள் யாவும் பழைய நோட்டுக்களையே கொடுத்து மீட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள நகைகளை மீட்கச் சென்றால், 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாகவும், 50, 100 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் அடகு வைத்த நகைகளை திரும்ப பெற முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...