போதிய தகுதியில்லாமல், நவீன மருந்துகளை பரிந்துரைக்கும் ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்று முறை சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 10 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மாற்று முறை சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், நவீன மருந்துகளை பரிந்துரைப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து, அந்த மருத்துவர்களுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு தடை விதிக்கக் கோரி, தனியார் மருத்துவர்கள் சங்கதத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதித்து, 10 ஆண்டுகளுக்கு முன் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி உத்தரவின்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2006-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியதுடன், தனியார் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை காரணம் காட்டி, கடந்த 10 ஆண்டுகளாக இந்த மருத்துவர்கள் காவல் துறையினரின் நடவடிக்கைகளை தடுத்துள்ளனர் எனவும், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா போன்ற மருத்துவ படிப்புகளை முடிப்பவர்கள், தங்கள் சான்றிதழ்களை, மாநில அரசு பராமரிக்கும் பதிவில் பதிவு செய்த பிறகே மருத்துவ பணியை துவங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல, எந்த மருத்துவ சிகிச்சைக்கு தகுதி பெற்றிருக்கிறார்களோ, அந்த துறையில் மட்டும் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.