வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில், வியாழக்கிழமையன்று ரூ.4,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதிகளவு பணம் எடுக்க வேண்டுமெனில், அது ரொக்கமாகத் தரப்படாமல் வேறொரு வங்கிக்
கணக்குக்கு அனுப்புவதற்கான படிவங்கள் தரப்பட்டன. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்தியா முழுவதும் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, வங்கிக் கிளைகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பொது மக்களின் கூட்டம் தொடர்கிறது.
செல்லாத ரூபாய் நோட்டுகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும், மின்வாரிய கட்டண செலுத்தும் இடங்களிலும், மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் அளிக்கலாம் என்ற காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்கிகளில் கடும் கட்டுப்பாடுகள்: செல்லாத ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் நிரப்பும் நிலையம் போன்றவற்றில் டிசம்பர் 15 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டாலும், வங்கிக் கிளைகளில் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் வங்கிக் கிளைகள் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் எடுப்பதற்கான வார வரம்பு வியாழக்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, வாடிக்கையாளர்கள் ரூ.24 ஆயிரத்துக்கு பணத்தை எடுப்பதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து அளித்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு தொகைக்கு பணமாக வழங்கப்படாது என வங்கிக் கிளைகள் மறுப்புத் தெரிவித்தன.
இதுகுறித்து, பிராட்வே பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், வார வரம்பாக ரூ.24 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், வங்கிக் கிளைகளில் வியாழக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் வரை ஒவ்வொரு கணக்கில் இருந்தும் ரூ.4,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை மட்டுமே வழங்கப்பட்டது. பிற்பகலுக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் அளித்தனர். இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தும் அதனை எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்றார்.
ரிசர்வ் வங்கியிலும் நாணயங்களே....: வங்கிக் கணக்கில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்க, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் தொடர்ந்து நாணயங்களே விநியோகம் செய்யப்படுகிறது.
2 ஆயிரம் ரூபாய்க்கு 10 அல்லது 5 ரூபாய் நாணயங்களே மட்டுமே அளிக்கப்படுவதால் அதனை பொது மக்கள் வேறுவழியின்றி வாங்கிச் செல்கின்றனர் என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, அந்த வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கிக் கிளைகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணிகள் வெகுவாகக் குறைந்ததால் பொது மக்கள் ரிசர்வ் வங்கிக்கு வரத் தொடங்கியுள்ளனர். மேலும், 2 ஆயிரம் புதிய ரூபாய் நோட்டுக்கும் சில்லறைகளைப் பெற்றுச் செல்கின்றனர். ரிசர்வ் வங்கியிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படவில்லை. வரும் திங்கள்கிழமையில் இருந்து புதிய ரூ.500 நோட்டுகள் அனைத்து வங்கிகள், ஏடிஎம் மையங்களிலும் முழுமையான அளவில் விநியோகிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.