நாசிக் அச்சகத்தில் ரூ.500 புதிய நோட்டுகள் அச்சடிப்பு பணி தீவிரம்!!!

நாசிக் அச்சகத்தில் ரூ.500 புதிய நோட்டுகள் அச்சடிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 50 லட்சம் நோட்டுகள் ஆர்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8–ந் தேதி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு, நாடு முழுவதும் ஒரு அசாதாரண

சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பொது மக்கள் வங்கிகளில் டெபாசிட்  செய்து புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கி வருகின்றனர். புதிய 500 ரூபாய் கிடைக்கவில்லை. பழைய ரூ.500 நோட்டுக்குப் பதில் புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகங்கள் மைசூர் மற்றும் மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இதில் நாசிக்கில் உள்ள அச்சகத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 50 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இரண்டாவது கட்டமாக புதன்கிழமைக்குள் 50 லட்சம் நோட்டுக்கள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். இந்த புதிய நோட்டுகள், நாடு முழுவதும் ரூபாய் நோட்டு மாற்றுவது, மற்றும் பணம் எடுப்பதில் மக்கள் எதிர்க்கொண்டு வரும் சிரமத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் புதிய 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இவை அதிக அளவில் அச்சடிக்கப்டுகிறது. இந்த நோட்டுகளும் புழக்கத்துக்கு விரைவில் வரும் என்று தெரிகிறது. இந்த நோட்டுகள் வந்த பின்புதான் பணத்தட்டுப்பாடு நீங்கும். இதற்கு இன்னும் 2, 3 வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...