மும்பை, சில்லரை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தச்சுத்தொழிலாளிமும்பை சிவாஜிநகரை சேர்ந்தவர் ஜெக்தீஷ் சர்மா. தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி கிரண். நிறைமாத
கர்ப்பிணியான இவருக்கு டிசம்பர் 7–ந் தேதி பிரசவம் நடக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 9–ந் தேதி கிரணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.இதைத்தொடர்ந்து அவரையும், குழந்தையையும் கோவண்டியில் வழக்கமாக சிகிச்சைக்கு செல்லும் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஜெக்தீஷ் சர்மா அழைத்து சென்றார். தாய்க்கும், சேய்க்கும் முதற்கட்ட சிகிச்சை அளித்த பெண் டாக்டர், மேற்கொண்டு அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், அதையும் 500, 1000 ரூபாய் தவிர்த்து சில்லரையாக செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெக்தீஷ் சர்மா, இப்போதைக்கு ஆஸ்பத்திரியில் இடம்கொடுங்கள், சில மணிநேரங்களில் சில்லரை மாற்றி தருகிறேன் என்று வேண்டிக்கேட்டு கொண்டார். ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த டாக்டர், சில்லரை இல்லை என்றால் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிவிட்டார்.இதனால், பதறிப்போன அவர், மனைவியையும், குழந்தையையும் அழைத்து கொண்டு மற்றொரு ஆஸ்பத்திரிக்கு ஓடினார். துரதிருஷ்டவசமாக, குழந்தையின் உடல்நிலை அதற்குள் மோசமாகி பரிதாபமாக உயிர் இழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.தன்னுடைய குழந்தையின் சாவுக்கு கோவண்டி பெண் டாக்டர் தான் காரணம் என்று கூறி, சிவாஜிநகர் போலீசில் புகார் செய்தார்.